துரோகத்தை நிறுத்து : மீண்டும் தர்மயுத்தை தொடங்கும் ஒபிஎஸ் ?

O Paneer Selvam ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jun 22, 2022 08:09 AM GMT
Report

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான ஒற்றை தலைமை

இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

துரோகத்தை நிறுத்து  : மீண்டும் தர்மயுத்தை தொடங்கும் ஒபிஎஸ் ? | Dharmayutham Again O Panneerselvam

இன்று அவர் தனது ட்விட்டரில் அதிமுகவில் அராஜகப் போக்கு நிலவி வருவதாகவும், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஒபிஎஸ் தரப்பில் ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனுவை ஆவடி காவல் ஆணையரகம் நிராகரித்துள்ளது . பொதுக்குழு கூட்டம் பொது இடத்தில் வைக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரங்கட்டப்படும் ஒபிஎஸ்

அதனை தடுக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் நாளை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளநிலையில், உறுப்பினர்களுக்கு 3 கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்விற்காக எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

மீண்டும் தர்மயுத்தம்

இந்நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் தர்மயுத்தம் நடத்த ஒ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது , சுமார் 2000 காவலர்கள் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பில் உள்ளது.

துரோகத்தை நிறுத்து  : மீண்டும் தர்மயுத்தை தொடங்கும் ஒபிஎஸ் ? | Dharmayutham Again O Panneerselvam

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரண்டு எடப்பாடியே துரோகத்தை நிறுத்து என கோஷம் எழுப்பியுள்ள நிலையில் ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்பதால் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஓ.பி.எஸ். மறுப்பு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

வெடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம் - தேர்தல் ஆணையத்தை நாடும் ஓபிஎஸ்!