முதன்முதலில் கலைஞர் என்ன பாத்து சொன்ன வார்த்தை..! மேடையில் நெகிழ்ந்த தனுஷ்

Dhanush M K Stalin M Karunanidhi
By Karthick Jan 06, 2024 04:58 PM GMT
Report

கலைஞர் 100 விழாவில் நடிகர் தனுஷ் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும், முதல்வர் முக ஸ்டாலின் குறித்தும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

கலைஞர் 100

கலைஞர் 100 திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் 100 நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

dhanush-speech-in-kalaignar-100-event

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த நிகழ்ச்சி மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இன்று நடந்து வருகின்றது.

வாங்க மன்மத ராசா..

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் தனுஷ் “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை என குறிப்பிட்டு, ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தாக குறிப்பிட்டார்.

கலைஞர் - தமிழ் - சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாது..!"கலைஞர் 100" நிகழ்ச்சியில் கமல்

கலைஞர் - தமிழ் - சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாது..!"கலைஞர் 100" நிகழ்ச்சியில் கமல்

அப்போது அங்கு வந்திருந்த கலைஞர் தன்னை பார்த்து "வாங்க மன்மத ராஜா" எனக் கூறியதை குறிப்பிட்ட தனுஷ், கலைஞர் நம்முடைய பாடலை கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என தெரிவித்தார்.

dhanush-speech-in-kalaignar-100-event

தொடர்ந்து அசுரன் படம் பார்த்துட்டு முதல்வர் முக ஸ்டாலின் தன்னைத் தொடர்புகொண்டு, "பிரதர் நான் ஸ்டாலின் பேசுறேன்" என்ற என நினைவு கூர்ந்த தனுஷ், முதல்வர் முக ஸ்டாலின் தன்னை பிரதர் என்று அழைத்த அந்த யதார்த்தமான அணுகுமுறை மிகவும் பிடித்திருந்தது என்றும் கூறினார்.

கலைஞர் ஒரு Trend-Setter..! "கலைஞர் 100" நிகழ்ச்சியில் சூர்யா புகழாரம்...!

கலைஞர் ஒரு Trend-Setter..! "கலைஞர் 100" நிகழ்ச்சியில் சூர்யா புகழாரம்...!

தொடர்ந்து பேசிய அவர், யாராவது சொன்னால் தான் கலைஞர் மறைந்துவிட்டார் என தோன்றுகிறது எனக்கூறி, மற்றபடி கலைஞர் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பது போலத்தான் தனக்கு தோன்றும் என குறிப்பிட்டார்.

dhanush-speech-in-kalaignar-100-event

மேலும், கலியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றார், 2000-ஆம் ஆண்டில் கருணாநிதி "நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்" என்றார் என்று பேசினார்.