கலைஞர் - தமிழ் - சினிமா - அரசியல் பிரிக்கவே முடியாது..!"கலைஞர் 100" நிகழ்ச்சியில் கமல்
கலைஞர் 100 விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்காக முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.
கலைஞர் 100
தமிழ் திரைப்பட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா "கலைஞர் 100" விழா, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரிக்கவே முடியாது
கலைஞர் நூற்றாண்டு விழா மேடையில் பேசிய கமல்ஹாசன் மேடையின் ஒரு ஒரத்தில் நின்று பேச துவங்கினார். பேச்சினை துவங்கும்போது, “ என்னடா ஒரு ஓரமா நின்னு பேசறேன்னு நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாத்தான் இருப்பேன் என்று பணிவுடன் கூறினார் கமல்.
தொடர்ந்து பேசிய அவர், “கலைஞரையும் தமிழையும் கலைஞரையும் சினிமாவையும் கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது என புகழாரம் சூட்டினார்.
எனது நண்பர் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த அரசியல் பண்பிற்கு முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்த கமல், கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் எனது தமிழ் அசான்கள் என குறிப்பிட்டார்.