கலைஞர் ஒரு Trend-Setter..! "கலைஞர் 100" நிகழ்ச்சியில் சூர்யா புகழாரம்...!
கலைஞர் 100 விழாவில் பேசிய நடிகர் சூர்யா, அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
கலைஞர் 100
தமிழ் திரைப்பட திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா "கலைஞர் 100" விழா, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Trendsetter
விழா மேடையில் பேசிய நடிகர் சூர்யா, “சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியதே கருணாநிதி தான் என்று கூறி, அரசியலிலும் அவர் பல மாற்றங்களை கொண்டு வந்தவர் என புகழாரம் சூட்டினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய அவர் சினிமாவை ஒருபோதும் கைவிடவில்லை என்று கூறி, அதனால்தான் அவரை மரியாதையாக ‘கலைஞர்’ என அழைக்கிறோம் என்றார்.
முக்கிய விழா
தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, "பராசக்தி" படத்தில் கை ரிக்ஷா இழுத்து வரும் காட்சியை சுட்டிக்காட்டி, படத்தில் வரும் வசனம் போலவே, படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தவர் என்று தெரிவித்தார்.
முதலில் கலைஞர் ஒரு படைப்பாளி என்று கூறிய சூர்யா, அப்படிப்பட்டவருக்கு கலைத்துறையினர் சேர்ந்து நூறாவது ஆண்டு விழா எடுப்பதை முக்கியமான விழாவாக பார்ப்பதாக குறிப்பிட்டு, கருணாநிதிக்கும், அவரது எழுதுகோலுக்கும் என் மரியாதைகள் என்றும் அவரை பார்த்து ஆசீர்வாதம் பெற்றுள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.