செட் ஆகாது; நயன்தாராவுடன் நடிக்க மறுத்த தனுஷ் - என்ன காரணம் தெரியுமா?
நயன்தாராவுடன் நடிக்க தனுஷ் தயக்கம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடிகராக கலக்கி வருகிறார் தனுஷ். அதுமட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மைக் கொண்டவர்.

முன்னதாக, இவர் நயன்தாராவுடன் நடித்து வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார்.
நடிக்க மறுப்பு
அதன் பிறகு தனுஷை வைத்து குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து படங்களை இயக்கினார். இந்நிலையில், யாரடி நீ மோஹினி கதையை கூறிய மித்ரன் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கூறிய நிலையில்,

நயன்தாரா எனக்கு ஜோடியாக செட் ஆவாரா? திரையில் என்னைவிட முதிர்ச்சியாக தெரிவாரே என கூறி நடிக்க மறுத்துள்ளார் தனுஷ். அதன்பிறகு வற்புறுத்தலுக்குப்பின் நடித்தார்.
ஆனால், அவர்களின் கெமிஸ்ட்ரி அசத்தலாகவே இருந்தது. தொடர்ந்து இருவரும் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதுவே காரணமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan