நிறைய அவமானப்பட்டிருக்கேன்; தயவுசெஞ்சு அதை மட்டும் பண்னுங்க - தனுஷ் உருக்கம்!
படிப்பின் முக்கியத்துவம் குறித்து நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ்
தனுஷ் கோலிவுட்டைத் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை கலக்கி வருகிறார். தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிக்பாஸ் மூலம் அடிப்படை கல்வி குறித்த சர்ச்சை பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் படிப்பின் முக்கியத்துவம் குறித்து தனுஷ் பேசியது வைரலாகி வருகிறது.
கல்வி அவசியம்
படங்களில் ஹீரோக்கள் சிலர் படிக்காமல் இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ. எனவே நன்கு படியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது ரசிகர்களுக்கு பல பேட்டிகளில் ஒரு டிகிரியாவது படிச்சிடுங்க என அட்வைஸ் செய்துள்ளார்.
தனுஷ் தனது படங்கள் மூலமும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.