வேறு ஒருவருடன் திருமணம்; சட்டப்படி விவாகரத்து செய்யும் ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி - தீயாய் பரவும் தகவல்!
ஐஸ்வர்யா-தனுஷ் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஐஸ்வர்யா-தனுஷ்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை.
விவாகரத்து
இந்நிலையில், சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், இருவரில், ஒருவர் வேறு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் இவர்கள் முறைப்படி விவாகரத்து செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அவர் தனது 50வது படத்தை இயக்கி தானே நடிக்கவுள்ளார். ஐஸ்வர்யா, தான் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படம் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்க ஜனாதிபதி சொன்ன புதிய தகவல்(வைரலாகும் காணொளி) IBC Tamil
