விவாகரத்துக்கு பின் மனைவியுடன் காதலா? ஒரே வீட்டிற்கு வந்து செல்லும் தனுஷ் , ஐஸ்வர்யா..!
கணவன் மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது ஒரே வீட்டிற்கு வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் - விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேளையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.
விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.
ஒரே வீட்டில் மீண்டும் இருவர்
அதை தொடர்ந்து தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.
விவாகரத்து அறிவித்தபின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.