சூப்பர் ஸ்டார் ரஜினியின் தந்தையை பார்த்துள்ளீர்களா? இதோ அரிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் "சிவாஜி ராவ் கெய்க்வாட்". ரஜினிகாந்த்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை வென்றுள்ளார்.
ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தமிழ் திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்ற மகுடத்தை சூடியவர். இந்நிலையில், ரஜினியின் ஓல்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் ரஜினி, அவரது தந்தை ரானோ ஜிராவுடன் இருக்கிறார். சினிமாவிற்குள் அறிமுகமான பிறகு அவரது தந்தையை சந்தித்த போது எடுத்த படத்தை ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.