என்கிட்ட எந்த மாற்றமும் இல்ல; ஐஸ்வர்யா புரிஞ்சு நடந்துக்குவாங்க - தனுஷ் பளீச்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகர் தனுஷ் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். தனது கடந்த கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் திடீரென பிரிந்து வாழ்ந்தனர். மேலும், தற்போது இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாற்றம் இல்லை
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது ரசிகர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் சேர்ந்து வாழமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை மற்றும் ஐஸ்வர்யா குறித்து நடிகர் தனுஷ் பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் தனுஷ் பேசியதாவது "திருமணத்துக்கு முன்பு நான் எப்படி இருந்தேனோ அப்படியேதான் திருமணத்துக்கு பிறகும் இருக்கிறேன். என்னிடம் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனது மனைவி ஐஸ்வர்யா என்னை நன்றாகவே புரிந்துகொண்டு நடந்துகொள்வார்" என்று தெரிவித்துள்ளார்.