இரவுகளில் இதில் போலீஸார் தலையிடக் கூடாது... டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இரவு நேர கடைகள்
இருப்பினும் சில இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன.
எனவே சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில் குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது.
24x7 இயங்கலாம்
அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ன் படி 10க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்
தமிழக அரசு
அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் https://www.seithisolai.com/இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.
அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அலமாறியை உங்கள் படைப்புதான் அலங்கறிக்கிறது -வைரமுத்துக்கு முதல்வர் வாழ்த்து