திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து பழனி - தரிசனத்திற்கு நின்ற பக்தர் உயிரிழப்பு!
பழனி மலைக்கோவிலில் பக்தர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனி முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இங்கு சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர் ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.
பக்தர் பலி
தொடர்ந்து போலீஸார் விசாரணையில், இறந்த நபர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த செல்வமணி என்பது தெரியவந்தது. செல்வமணி தனது பகுதியை சேர்ந்தவர்களுடன் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
பின், பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று அனைத்து பக்தர்களையும் அழைத்து கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு மேல் ஏறியுள்ளனர்.
அப்போதுதான் வரிசையில் காத்திருந்தபோது செல்வமணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரத்தில் தரிசனத்திற்கு வரிசையில் நின்ற பக்தர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.