பிரபல காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு - ரகசிய திருமணம் செய்து கொண்ட தேவயானி!

Sumathi
in பிரபலங்கள்Report this article
காமெடி நடிகர் சிங்கமுத்துவிற்கும் தேவயானிக்கும் இருக்கும் உறவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை தேவயானி
1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தன் மூலம் அந்த தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்
இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளன. அம்மாவின் கடும் எதிர்ப்பையும், படை பலத்தையும் மீறி சுவர் ஏரி குதித்து திருத்தணியில் வைத்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
அப்பொழுது சாட்சி கையெழுத்து போட்டது காமெடி நடிகர் சிங்கமுத்து தானாம்.
மேலும், ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்து விட்டது அவர் தான் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.