நடிகை தேவயானியை 2வது திருமணம் செய்து கொடுங்கள் - அம்மாவிடம் பெண் கேட்ட பிரபல நடிகர்
நடிகை தேவயானியை 2வது திருமணம் செய்து கொடுங்கள் என அவரது தாயிடம் பிரபல நடிகர் பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் அறிமுகம்
டெல்லியில் பிறந்த இவரின் பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். உடலை நல்ல பிட்டாக வைத்துக்கொள்வது இவரின் தினசரி ஹாபிட். இவர் தனது படிப்பை சென்னையில் பயின்றார்.
பாடிபில்டராக வலம் வந்த சரத்குமார் என்சிசியில் சேர்ந்தார். பின்னர் 1974 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
பின்னர் செய்தியாளராக பணிபுரிந்த அவர், கண்ணதாசனை சந்தித்து பேசிய போது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

1986 ஆம் ஆண்டு சின்னப்பூவே மெல்லப்பூவே பேசு படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் நடித்து வந்த இவர், பின்னர் கதாநாயகனாக மாறினார்.
பெண் கேட்ட சரத்குமார்
பின்னர் அவருக்கான பட வாய்ப்புகள் என்பது குவியத் தொடங்கியது. மேலும் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றியை கொடுத்தது. 1984 ஆம் ஆண்டு சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சாயாவுக்கும், சரத்குமாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அப்போது தன்னுடன் ஜோடியாக நடித்த தேவையானியுடன் ஒருதலை காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தேவயானியின் பெற்றோரிடம் நேராக சென்று பெண் கேட்டுள்ளார் சரத்குமார். தேவயானியின் தயார் ஏற்கனவே திருமணமானதை காரணம் காட்டி நிராகரித்துள்ளார்.
பின்னர் நடிகை நக்மாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருந்து வந்துள்ளனர். நக்மாவிற்கு நடிகர் சரத்குமார் நிறைய செலவுகள் செய்துள்ளார்.
ராதிகாவுடன் திருமணம்
பின்னர் நக்மாவிற்கும் சரத்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கடும் பண நெருக்கடியில் இருந்த போது ராதிகாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
சரத்குமார் பண நெருக்கடியில் சிக்கி தவிப்பதை உணர்ந்த ராதிகா பணம் கொடுத்து உதவியுள்ளார்.
நாளடைவில் இவர்கள் நட்பு காதலாக மாறி, இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்ற தகவலை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan