கவர்ச்சி நடிகைகள் தான் பிரபலம் ஆகிறார்கள்…நல்லவேல நா இந்த காலத்துல பொறக்கல - தேவயானி சுளீர்!!

Devayani Tamil Cinema
By Vinothini May 01, 2023 06:39 AM GMT
Report

நடிகை தேவயானி சமீபத்தில் அளித்துள்ள பெட்டியில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேவையானி பேட்டி

பிரபல நடிகை தேவையானி, ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு பெற்று முன்னணி நடிகையாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களில் அதிகபட்சமாக புடவை, தாவணியில் தான் நடித்திருப்பார். அவர் பெரிதாக எந்த கவர்ச்சிகாரமான பகுதியும் நடித்ததில்லை, அதனை தவிர்த்து வந்தார்.

devayani-tamilactress-criticism

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், " இப்போதைய காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நடித்திருந்தால் கவர்ச்சியான படங்களில் நடிக்க வேண்டி இருந்திருக்கும், கவர்ச்சி நடிகர்கள் தான் பிரபலம் ஆகிறார்கள். கவர்ச்சி இல்லாமல் நடிப்பவர்களை பழம் என்கிறார்கள், நல்லவேளை நான் இந்த காலகட்டத்தில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் சினிமாவில் நடிப்பது எனக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

நெட்டிசன்ஸ் எதிர்ப்பு

தொடர்ந்து, அவர் "தமிழ் சினிமாவில் முன்புதான் கவர்ச்சி பாடல்கள், கவர்ச்சி காட்சிகள் அதிகமாக இருந்தன. இப்போது அதையெல்லாம் படிப்படியாக குறைந்து கவர்ச்சி பாடல்கள் அதிகம் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது.

devayani-tamilactress-criticism

இந்த நிலையில் முன்பை விட இப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் கவர்ச்சி அதிகமாக உள்ளது" என்று கூறினார். கவர்ச்சி காட்டும் நடிகைகள் மட்டுமே பிரபலமாக முடியும் என தேவயானி கூறியதை தவறு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.