சீமான் ஒழிக, திரும்பிப் போ; திடீர் ஆவேச முழக்கம் - பசும்பொன்னில் பரபரப்பு!

Tamil nadu Seeman Madurai
By Sumathi Oct 30, 2024 03:30 PM GMT
Report

பசும்பொன்னில் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறப்பு மற்றும் மறைவு நாள் இன்று. மேலும், குருபூஜை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

seeman

117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று

அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,

விஜய் ரசிகர்களே எனக்குதான் வாக்களிப்பார்கள் - சீமான் நம்பிக்கை

விஜய் ரசிகர்களே எனக்குதான் வாக்களிப்பார்கள் - சீமான் நம்பிக்கை

சீமானுக்கு எதிர்ப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பசும்பொன்னுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்தார்.

முக்குலத்தோர் ஜாதி தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு முன்னரே எதிர்ப்பு இருந்தது. எனவே, தேவர் நினைவிடத்தில் நுழைந்த சீமானுக்கு எதிராக அங்கு கூடியிருந்தவர்கள் சீமான் ஒழிக! சீமான் திரும்பிப் போ! என இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

பின் போலீஸார் பேச்சுவார்த்தையில், தேவர் நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.