Tuesday, Apr 29, 2025

தேவர் ஜெயந்தி.. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

M K Stalin Tamil nadu
By Vidhya Senthil 6 months ago
Report

  முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது  பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் 

 ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் 62 ஆவது குரு பூஜை இன்று அ(க் 30 )ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

Tribute to Chief Minister M.K.Stal at Pasumbon Devar Memorial

இந்த நிலையில், குருபூஜையொட்டி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தச் சென்னையிலிருந்து மதுரை வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை, கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் - முதல்வர் அதிரடி!

மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் - முதல்வர் அதிரடி!

மரியாதை

இதைத்தொடர்ந்து வாகனம் மூலம் சாலை மார்க்கமாகப் பசும்பொன்னுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Pasumbon Devar Memorial

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.