இன்னும் பார்க்கவில்லை.. விஜய் குறித்த கேள்வி - உதயநிதி ஸ்டாலினின் அளித்த பதில்
விஜய் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கேள்வி
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசிய உரை பல அரசியல் தலைவர்கள் தங்களது விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர்.
தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பை வரவேற்றனர்.
உதயநிதி
இந்நிலையில், தவெக மாநில மாநாடில் விஜய் பேசிய கருத்து குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, "இந்த விஷயம் தொடர்பாக எங்களது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணன் பதில் அளித்துவிட்டார்.
அதை தவிர வேறு எதையும் கூற விரும்பவில்லை,"என்று கூறினார். முன்னதாக விஜய் என்ன பேசினார் என்பதை பார்க்கவில்லை என்றும், பார்த்துவிட்டு பதில் அளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.