மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் - முதல்வர் அதிரடி!

M K Stalin Tamil nadu
By Vidhya Senthil Oct 30, 2024 02:50 AM GMT
Report

இன்று உலக சிக்கன நாளையொட்டி மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

உலக சிக்கன நாளையொட்டி அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

mk stalin

மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

உதயநிதியின் டி-ஷர்ட் விவகாரம்.. உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி - உடனே அரசு பதிலளிக்க உத்தரவு!

உதயநிதியின் டி-ஷர்ட் விவகாரம்.. உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி - உடனே அரசு பதிலளிக்க உத்தரவு!

சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. இது சேமிப்பவர்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்வதற்கும் பயன்படுகிறது. தனிமனிதனின் சேமிப்பு அக்குடும்பத்துக்கு பயன்படுவதோடு மட்டும் அல்லாமல்,

பங்களிப்பு

அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஏதுவாகிறது.இதன்மூலம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிப் பணிகளில் சிறுசேமிப்புத் திட்டங்களின் பங்களிப்பு சிறப்பான அளவில் அமைகிறது. சிறுகக் கட்டி பெருக வாழ் என்னும் பொன் மொழிக்கேற்ப, பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், விவசாயிகள்,

mk stalin

தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், முறைசாரா தொழிலில் ஈடுபடுவோர், சுயதொழில் புரிவோர், மகளிர்ஆகிய அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் சேர்ந்து சேமிப்புக் கணக்கினை தொடங்கிட இந்த உலக சிக்கன நாளில் கேட்டுக்கொள்கிறேன்.

“செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” என்னும் உறுதி கொண்டு சிறப்பாக வாழ்ந்திடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.