பெண்ணின் கழிவறை மற்றும் படுக்கையறையில் ரகசிய கேமரா - வீட்டு ஓனரின் கொடூர செயல்!
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய கேமரா
பொதுவாகத் தங்கும் விடுதி, நட்சத்திர ஓட்டல், லிப்டுகளில் அறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு,கண்காணிப்பது வழக்கம். அப்படி ஏதேனும் தவறு நடந்தால் கண்டுபிடிப்பதற்கு அங்கு வைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் தான் ஆதாரமாக உள்ளனர்.
ஆனால் விடுதி உள்ளிட்டவற்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு தனிநபர்களின் அந்தரங்களைத் திருடுவதாகப் புகார் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் டெல்லியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் சிவில் சர்வீஸ் ஐஏஎஸ் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் விடுதிகளில் தங்கியும் , வாடகை வீடு எடுத்துத் தங்கியும் படித்து வருகின்றனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டெல்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஐஏஎஸ் தேர்வுக்கு படித்தது வந்துள்ளார். தனது வாட்ஸ்-அப் கணக்கை யாரோ பாலோ செய்வதை அறிந்துள்ளார்.
கொடூர செயல்
பின்னர், வாட்ஸ்-அப்பில் linked device-ஐ பார்த்த போது அதில் தனக்கு தொடர்பு இல்லாத லேப்டாப் ஒன்று கனெக்ட் ஆகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த இளம் பெண் தான் தங்கியுள்ள வாடகை வீட்டில் சோதனை செய்தார்.
அப்போது, பாத்ரூமில் உள்ள பல்ப் ஹோல்டரில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார். இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணின் அறையைச் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் படுக்கையறையில் உள்ள பல்ப் ஹோல்டரிலும் மற்றொரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை காவல்துறை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து வீட்டிற்குச் சந்தேக நபர்கள் வேறு யாரேனும் வந்தார்களா ? அல்லது வீட்டு ஓனர் இது போன்று செய்தாரா என்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.