தனியார் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்திய ஊழியர் - ஷாக்கான தம்பதியினர்!
தங்கும் விடுதியில் ஊழியர் ஒருவர் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா தளம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதனால் மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ஒரு தனியார் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சார்ந்த சாஹத் (22) தனது மனைவியுடன் தங்கியுள்ளார். அப்பொழுது கழிவறையில் கேமரா பொருந்தியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அந்த தம்பதியினர் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த விடுதியின் ஊழியர் 22 வயதான சிண்டு என்பவரை போலீசார் விசாரித்தனர்.
அப்பொழுது கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியது இவர் தான் என்பதை உறுதி செய்ததும் போலீசார் இவரை கைது செய்தனர். கூடலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சுற்றுலா தளங்களில் இவ்வாறான சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.