லாட்ஜில் பெட்ரோல் குண்டு வீச்சு - அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்
சென்னை வடபழனியில் உள்ள தங்கும் விடுதியில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியவரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
சமீபத்தில் சென்னை வடபழனியில் தமீம் அன்சாரி என்பவரின் 21 அறைகள் கொண்ட தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரவில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில், தங்கும் விடுதி தீ பிடித்து எரிந்தது. கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் தங்கும் விடுதி தீப்பிடித்து எரிந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்து வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து, தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
ஒருவர் கைது
இது குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விடுதியின் வரவேற்பு அறையின் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விடுதி மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் வினோத் என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.