லட்டுவால் ஏற்பட்ட பாவத்தை போக்க.. திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
சம்ரோஷணம் என்ற குடமுழுக்கு செய்து தோஷத்தைப் போக்கத் திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவை கலந்து இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி கட்சி தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது.இது குறித்து குஜராத் ஆய்வுக்கூடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அதில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.
பொதுவாக 100 சதவீத நெய்யில் அதன் தரம் என்பது 99 சதவீதம் பாலின் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால், ஆய்வு அறிக்கையில் 100 சதவீதத்தில் 20 சதவீதம் மட்டுமே நெய்யின் தரம் இருந்துள்ளது தெரியவந்தது.
தேவஸ்தானம்
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றம்சாட்டினர்n.
இந்த நிலையில் திருப்பதி கோயிலைச் சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு சம்ரோஷணம் என்ற குடமுழுக்கு செய்து தோஷத்தைப் போக்க நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.