முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சியில் தொழில் வட்டாரங்கள்
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீங்கள் இருபது கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம்.
இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சூடுபவர்கள் இருக்கிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே, இதுகுறித்து அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
கொலை மிரட்டல்
அதன் அடிப்படையில், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இது தொடர்பாக மும்பையின் காம்தேவி விமான நிலையத்தில் பிரிவு 387 562 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வருடம் பீகாரில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.