ரிலையன்ஸ் நிறுவனம் 3 பிள்ளைகளில் யாருக்கு? சீக்ரெட் உடைத்த நீதா அம்பானி!
தனது பிள்ளைகள் குறித்து நீதா அம்பானி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம்
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீதா அம்பானி. இவர்களுக்கு இஷா, ஆகாஷ் (32) மற்றும் ஆனந்த் (28) என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் நீதா அம்பானி அளித்த பேட்டி ஒன்றில், "நானும் முகேஷும் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்.
நீதா அம்பானி
சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதுதான் மிக முக்கியமான ஒன்று என என் குழந்தைகளிடம் எப்போதும் சொல்வேன். அவ்வப்போது நாங்கள் தனியாக லாங் டிரைவ் செய்வோம். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டு ஜாலியாக செல்வோம். ஸ்ட்ரீட் ஃபுட்டை சாப்பிடுவோம்.
எனது மகள் இஷா இப்போது சில்லறை வணிகத்தை நடத்தி வருகிறார். நான் எனது பிள்ளைகள் இஷா, ஆகாஷ், ஆனந்த் இடையே எந்தவொரு பாகுபாட்டையும் காட்டியதே இல்லை. ஜியோ மூலம் டிஜிட்டல் புரட்சியை ஆகாஷ் முன்னெடுத்து வருகிறார்.
இவர்கள் மூவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
வெற்றிக்கு பிறகும் கூட பணிவாக இருங்கள், இரக்கத்துடன் இருங்கள். மக்களை மரியாதையுடன் நடத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.