396 கோடி: உலகின் விலையுயர்ந்த ஐபோன்.. நீதா அம்பானிக்கு சொந்தமா? ஆச்சர்ய தகவல்!

Mukesh Dhirubhai Ambani
By Sumathi Sep 02, 2023 09:43 AM GMT
Report

396 கோடி மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த ஐபோன் நீதா அம்பானிக்கு சொந்தமானதாக பார்க்கப்படுகிறது.

நீதா அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீதா அம்பானி. இவர் உலகிலேயே அதிக விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு அறியப்பட்டவர்.

396 கோடி: உலகின் விலையுயர்ந்த ஐபோன்.. நீதா அம்பானிக்கு சொந்தமா? ஆச்சர்ய தகவல்! | Nita Ambani Own Worlds Most Expensive Iphone

தொடர்ந்து, புதிய பேஷன் ட்ரெண்டுகளில் தன்னை ஈடுபடுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். அதன்படி, உலகின் மிக விலையுயர்ந்த செல்போனான ஃபால்கன் சூப்பர்நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்ட்டை இவர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஐபோன் 

இதன் விலை சுமார் 48.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.396 கோடியாகும். இளஞ்சிவப்பு வைரம் பதித்த 24-காரட் தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் எனக் கூறப்படுகிறது. மேலும், பிளாட்டினமும் பூசப்பட்டுள்ளது.

396 கோடி: உலகின் விலையுயர்ந்த ஐபோன்.. நீதா அம்பானிக்கு சொந்தமா? ஆச்சர்ய தகவல்! | Nita Ambani Own Worlds Most Expensive Iphone

ஆனால், ஃபால்கன் சூப்பர் நோவா ஐபோன் 6 பிங்க் டயமண்டை நீதா அம்பானி சொந்தமாக வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இருந்தாலும், உலகின் மிக விலையுயர்ந்த புடவை (ரூ. 40 லட்சம்), உலகின் மிக விலையுயர்ந்த நெக்லஸை (ரூ. 450 கோடி) வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.