கார்த்தி, விஷாலுக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. சிக்கிய துணை நடிகர்!

Karthi Nassar Vishal Chennai
By Sumathi Jul 06, 2022 06:37 AM GMT
Report

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர்கள் கார்த்தி, விஷால் மற்றும் நாசருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 நடிகர் சங்கம்

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று இரவு முன்தினம் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அந்த புகாரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர். பொதுச் செயலாளர் விஷால்.

vishal

பொருளாளர் கார்த்தி ஆகியோர் இரவு பாலாக உழைத்து வருகின்றார்கள் . இந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார் துணை நடிகர் ராஜதுரை.

 கார்த்தி, விஷால்

சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக அவர் வாட்ஸ் அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகள் விஷால், கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

karthi

நடிகர் சங்க உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. இப்படி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொலை மிரட்டல்

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ் அப் குரல் பதிவையும் நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கர் மேலாளர் அளித்த

இந்த புகாரின்படி தேனாம்பேட்டை போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்து துணை நடிகர் ராஜதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.  

உடலுறவின் போது மாரடைப்பு... இறப்பால் காதலி அதிர்ச்சி!