தமிழகத்திற்கு புதிய சட்டப்பேரவை வேண்டும் : கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவர்கள் தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும்.
புதிய சட்டப்பேரவை
கூடுதலாக ஒரு சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை தமிழகத்தின் மையமான திருச்சியில் அமைத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும்.
மேலும், தமிழக அமைச்சரவை கூட்டத்தினை சென்னையில் மட்டும் நடத்தாமல், வேறு ஊர்களிலும் நடத்திட வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை, தலைமைச் செயலகத்திற்கு புதியகட்டிடம்,சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும்,திருச்சியிலும் நடத்திடவும்,அமைச்சரவைக் கூட்டத்தை சென்னையில் நடத்தாமல் வேறு ஊர்களிலும் நடத்த வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu @mkstalin அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன் pic.twitter.com/WLrhZTZeCw
— Karti P Chidambaram (@KartiPC) June 4, 2022