Sunday, May 11, 2025

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு !

M K Stalin Vellore
By Vidhya Senthil 9 months ago
Report

 வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துரை தயாநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி- தயாளு அம்மாளின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் திமுகவின் தென்மண்டல செயலாளராகவும், 2009 – 2014ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகன் துரை தயாநிதி, மதுரையில் தொழிலதிபராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு ! | Death Threat To Durai Dayanidhi At Vellore Cmc

‘மங்காத்தா’, ‘தமிழ்படம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் துரை தயாநிதி. இவர், அண்மைக் காலமாக திரைத்துறையில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு 2023 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி துரை தயாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம் - உடல் நிலை எப்படி இருக்கு?

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம் - உடல் நிலை எப்படி இருக்கு?

வேலூர் CMC

இந்நிலையில், சி.எம்.சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்றிரவு இரவு வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்குக் கொலை மிரட்டல் குறிப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததை அடுத்து வேலூர் CMC மருத்துவமனையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு ! | Death Threat To Durai Dayanidhi At Vellore Cmc

மேலும் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.