மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம் - உடல் நிலை எப்படி இருக்கு?
துரை தயாநிதி வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துரை தயாநிதி
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.
2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை மாற்றம்
அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பின், மார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், சென்னையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்ததையடுத்து வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.