கால்நடை மேய்க்க சென்ற சிறுமி - சீரழித்து உயிரோடு எரித்த சகோதரர்கள்!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சகோதரர்கள் உயிரோடு எரித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பாமல் மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நிலக்கரி உலை ஒன்றில் சிறுமியின் கிழிந்த துணிகள் மற்றும் செருப்புகள் கிடந்துள்ளது.
மரண தண்டனை
மேலும், சிறுமியின் உடலும் உலையில் எரிந்துக் கொண்டிருந்துள்ளது. உடனே, பாதி எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த காலு, கன்கா என்ற அண்ணன்-தம்பி சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீஸார், தடயங்களை மறைத்ததாக 3 பெண்கள் உள்பட 7 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் காலு, கன்கா இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மீதமுள்ள 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேரின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.