மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை - கதறிய 16 வயது சிறுவன்!
மெட்ரோ ரயில் பாதையில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
டெல்லி, ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து, 16 வயது சிறுவன் தனது எக்ஸ் தளத்தில்,
டெல்லி மெட்ரோ ரயிலில் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன். நான் 16 வயது சிறுவன். நான் தனியாக மெட்ரோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரவு 8:30-9:30 மணிக்கு ராஜீவ் சவுக் நிலையத்திலிருந்து சமய்பூர் பட்லி நோக்கி ரயிலில் ஏறினேன்.
வைரல் பதிவு
அப்போது தனது பின்பக்கத்தை யாரோ தொட்டது போல் இருந்தது. அப்போது பின்னால் இருந்த அந்த நபர் என் அந்தரங்க உறுப்பை தொட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகினேன். அவர் என்னை மீண்டும் தொட முயற்சித்தார்.
I just got assaulted in delhi metro right now at Rajiv chowk metro station. I am a 16 year old boy and I was travelling alone in the metro.
— Bhavya (@bhavyeah88) May 3, 2024
My orginal post was on reddit and people told me to post here and tag delhi police so I'm doing this.@DelhiPolice @DCP_DelhiMetro
இந்த முறை நான் அவரது கையை கடுமையாக கிள்ளினேன், அது இரத்தம் வர ஆரம்பித்தது, அதனால் அவர் சிறிது நேரம் நிறுத்தினார். மெட்ரோவில் இருந்து இறங்கினேன். ஆனால் அந்த நபர் துரத்தினார் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு டெல்லி காவல்துறை பதில் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும், சிறுவனைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.