உதவி கேட்க போனேன்...துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை - பிரஜ்வல் மீது தொடர் வழக்கு!
முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினரை துப்பக்கி முனையில் பலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது புகார் அளிக்கபடுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய மக்களவை வேட்பாளரான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை வீடியோ பதிவு செய்த விவகாரம் வெளியாகி, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை
இதனிடையே அவர் வெளிநாடு தப்பியோடியதாக செய்தி வெளியானது, எனவே, போலீஸார் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர். இந்நிலையில், 44 வயதான முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் பிரஜ்வல் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில், ''3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த மாணவிகள் 2 பேரை கல்லூரியில் சேர்க்க உதவுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டி என்னை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலிசார் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.