முதலமைச்சருக்கு மரணம் விளைவிக்க அகோரிகள் நடத்தும் கொடூர யாகம் - பகீர் தகவல்!
மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கொடூர யாகம்
சத்ரு பைரவி எனப்படும் இந்த மரணம் யாகம் எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்படுகிறது. இதில் அகோரிகள், மந்திரவாதிகள் மேலும் கர்மாக்களை நன்கு அறிந்த 8 ஜோதிடர்கள் கலந்து கொண்டு சத்திய பைரவி என்ற சக்தியை இந்த யாகத்தின் மூலம் சாந்தப்படுத்துகின்றனர்.
அத்துடன் மரண, மோகனா, ஸ்தம்பனா என்ற மூன்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்த மூன்று பரிசோதனைகளுக்காக 21 சிவப்பு நிற ஆடுகள், 3 எருமைகள், 21 கருப்பு நிற செம்மறி ஆடுகள், 5 பன்றிகள் பலியிடப்படுகிறது. இதன் பிறகு பிரசாதமாக மதுபானம், இறைச்சி ஆகியவை வழங்கப்படும்.
அகோரிகள்
கேரளாவில் உள்ள பல அகோரிகள் இந்த யாகத்தை நிறைவேற்றுவதில் திறமையானவர்கள் என சொல்லப்படுகிறது. தற்போது, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த கொடூர யாகம் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர், எனக்குக் கிடைத்த தகவலின்படி, எனக்கும், முதலமைச்சருக்கும் எதிராக பெரிய மாந்தீரிகம் நடக்கிறது.கேரளாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான வெறிச்சோடிய பகுதியில் சத்ரு பைரவி யாகம் நடந்து வருகிறது.
எனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் இப்படி செய்கிறார்கள்.இப்போது யாகம் நடந்து கொண்டிருக்கிறது, அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஆனால், நாம் நம்பும் கடவுள் நம்மைக் காப்பார்" என்று தெரிவித்துள்ளார்.