புலம்பெயர்ந்தோர்கள் இதை செய்தால் இனி மரண தண்டனை - டிரம்ப் அதிரடி

Donald Trump United States of America Death Penalty Election
By Sumathi Oct 12, 2024 10:00 AM GMT
Report

அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 மரண தண்டனை

வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள்.

புலம்பெயர்ந்தோர்கள் இதை செய்தால் இனி மரண தண்டனை - டிரம்ப் அதிரடி | Death Penalty For Migrants Kill Americans Trump

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலில் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கர்கள் மத்தியில் கமலா ஹாரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - 20 ஆண்டுகளாக கொடூரம்!

மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - 20 ஆண்டுகளாக கொடூரம்!

டிரம்ப் வேண்டுகோள்

இந்நிலையில், கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,

donald trump

’சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆபத்தானவர்கள்.

அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப்படையினர், போலீசாரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.