மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - 20 ஆண்டுகளாக கொடூரம்!

Sexual harassment Brazil Crime
By Sumathi Oct 12, 2024 07:18 AM GMT
Report

மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் 

பிரேசில், நோவோ ஓரியண்டேயில் பெண் ஒருவர் வீட்டு சிறையில் இருந்து தப்பித்து வந்து போலீஸில் தந்தை குறித்து புகாரளித்துள்ளார்.

மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - 20 ஆண்டுகளாக கொடூரம்! | Brazil Man Allegedly Sexually Abused For 20 Years

புகாரில், அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்துள்ளார். மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து சென்றுள்ளார். அண்டை வீட்டுக்காரர்கள் எவருக்கும் அவரது மனைவியைத் தெரியாது.

இளம்பெண்கள் கடத்தல்; ஒரே அறையில் மாதக்கணக்கில் பாலியல் சித்ரவதை - கொடூரம்!

இளம்பெண்கள் கடத்தல்; ஒரே அறையில் மாதக்கணக்கில் பாலியல் சித்ரவதை - கொடூரம்!

 20 வருட கொடூரம் 

இவர்களுக்கு 3 முதல் 22 வயதுக்குட்பட்ட ஏழு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குளிப்பதையும் ஆடை அணிவதையும் பார்க்க அந்த நபர் வீட்டின் சுவர்களில் துளைகளை இட்டதாக மகள்கள் கூறியுள்ளனர். அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

மனைவி, 7 குழந்தைகள் மற்றும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் - 20 ஆண்டுகளாக கொடூரம்! | Brazil Man Allegedly Sexually Abused For 20 Years

மேலும், சமீபத்தில் இறந்து போன தனது மாமியாரையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் மாமியார் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மகள்களில் ஒருவர் அந்நபருக்கு தூக்க மாத்திரை கொடுத்தபோதுதான் தப்பித்து புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த நபர் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். தற்போது இதுகுறித்த தீவிர விசரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.