மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்; கதறிய பெண் எம்.பி - கும்பல் வெறிச்செயல்!

Sexual harassment Australia Crime World
By Jiyath May 06, 2024 05:50 AM GMT
Report

பெண் எம்.பி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் துன்புறுத்தல் 

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பகுதியில் உள்ள யெப்பூன் தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரிட்டானி லாகா (37). இவர் அந்நாட்டின் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்; கதறிய பெண் எம்.பி - கும்பல் வெறிச்செயல்! | Mp Brittany Lauga Claims Physically Assaulted

இந்நிலையில் பிரிட்டானி லாகா இரவு நேரத்தில் வெளியே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், போதைமருந்து கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மயக்கம் தெளிந்ததும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த பிரிட்டானி லாகா, பிறகு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ரொம்ப கோபப்படுவீங்களா? அப்போ இந்த நோய்களுக்கு வாய்ப்பு அதிகம் - அதிர்ச்சி தகவல்!

ரொம்ப கோபப்படுவீங்களா? அப்போ இந்த நோய்களுக்கு வாய்ப்பு அதிகம் - அதிர்ச்சி தகவல்!

இது சரியில்லை

இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் "இது யாருக்கும் நடந்திருக்கலாம், துரதிர்ஷ்டவசமாக இது நம்மில் பலருக்கு நடக்கும். மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் எனது உடலில் நான் உட்கொள்ளாத மருந்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல்; கதறிய பெண் எம்.பி - கும்பல் வெறிச்செயல்! | Mp Brittany Lauga Claims Physically Assaulted

போதைப்பொருள் தன்னைக் கணிசமான அளவு பாதித்தது. இதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் தன்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களும் "போதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்”. இது சரியில்லை. போதைப்பொருள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் இல்லாத சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.