மகளின் கர்ப்பத்திற்கு தந்தைதான் காரணம் - புகாரளித்த தாய்!
கனவர் மீது பொய் புகாரளித்த மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொய் புகார்
சென்னை செனாய்நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், 2019ல் தி தனது 14 வயது மகள் தன் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த பென் கூறுகையில், மகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறுநீரக பிரச்னையால் அவதிஅடைந்ததால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேனிங் சென்டரில் சிறுநீரக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதில் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு சிறை
மேலும், மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்துள்ளார். இதனால், சிறுமியின் தந்தை மீது போக்சோ பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இப்பெண் சமர்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்துள்ளது. இதனை விசாரித்த சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, எம்.ராஜலட்சுமி,
அந்த பெண்ணுக்கு 6000 அபராதத்தையும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறுமியின் தந்தைக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கையும் ரத்து செய்துள்ளார். முன்னதாக, கணவன் மனைவிக்கு இடையே விவகரத்து தொடர்பான பிரச்னைகள் எழுந்துவந்ததால், தனது கணவனை பழிவாங்க இத்தகைய செயலை அப்பென் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.