பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியினை கர்ப்பமாக்கிய மாணவியின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரணி அருகே குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் கன்னியப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர் ஒரு மகன் ஒரு மகளுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கன்னியப்பன் குன்னத்தூர் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கன்னியப்பனின் மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்னர், கன்னியப்பன் அவருடைய மகளிடமே தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
அந்த 9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவரவே. பள்ளி நிர்வாகம் மற்றும் குன்னத்தூர் கிராம பொதுமக்கள்,காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது பற்றிமாவட்ட சமூக நலத்துறை விசாரணை செய்ததில் அந்தப் பெண் அவரது தந்தை கன்னியப்பன் மூலமாக கர்ப்பமானார் என்று தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவியின் பாட்டி லட்சுமி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கன்னியப்பன் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் கன்னியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம். அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.