9ஆம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் - விசாரணையில் அதிர்ச்சி!
9ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கர்ப்பம்
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 14வயது மகள் உள்ளார். இவர் அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் காலை சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வருவதுதான் வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், மாணவி சில மாதங்களாகவே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக தெரிவித்துளார். அதனால் அவரது தாய் சத்துமாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து மிகவும் சோர்வடைந்ததால், கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி
தொடர்ந்து சிடி ஸ்கேன் எடுக்க கூறியதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின், மகளை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் அவர் 7மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, பெற்றோர் புகாரளித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் மதுபாலன்(35) என்பவர் கர்ப்பமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள மதுபாலனை போலீஸார் தேடி வருகின்றனர்.