தங்கைக்கு பாலியல் வன்கொடுமை..15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அண்னன்!
தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை, திருவெற்றியூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் 15வயது சிறுமி. இவர் இராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென இவருக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
உடனே இவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.
சிறுமி கர்ப்பம்
அதில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் காலடிப்பேட்டை கோமாதா நகர் பகுதியில், ஏற்கனவே இருந்த வாடகை வீட்டில் வசித்து கொண்டு இருந்த போது சிறுமியின் சித்தி மகன் முகேஷ்(19) காதலித்து வந்ததாகவும் மூன்று முறை தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாய் சிறுமியிடம் வயிறு எதற்கு இப்படி பெரியதாக இருக்கு என்று கேட்டதற்கு சரியாக சாப்பிடாமல் இருப்பதால் வயிறு தொப்பை போடுவதாக கூறியுள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு தற்போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து இதுகுறித்து, அரசு மருத்துவமனை மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகேஷை தேடி வருகின்றனர்.