11 வயது மகள்... பலமுறை பாலியல் வன்கொடுமை - தந்தை வெறிச்செயல்!

Sexual harassment Assam Child Abuse
By Sumathi Sep 29, 2022 03:00 PM GMT
Report

11 வயது மகளை பல முறை பாலியல் வன்கொடுமை https://ibctamilnadu.com/article/six-members-gangrape-woman-in-front-of-her-husband-1664348653செய்த தந்தையில் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

அஸ்ஸாம், நாகோன் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது 11 வயது மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து, சிறுமியின் தாய் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

11 வயது மகள்... பலமுறை பாலியல் வன்கொடுமை - தந்தை வெறிச்செயல்! | Father Raping 11 Year Old Daughter

அதில், ``என் கணவர் என்னுடைய மகளை இதற்கு முன்பு பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார். நான் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தேன். போலீஸாரும் அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

தந்தை கொடூரம்

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

11 வயது மகள்... பலமுறை பாலியல் வன்கொடுமை - தந்தை வெறிச்செயல்! | Father Raping 11 Year Old Daughter

போலீஸில் புகார் செய்யப்பட்டதும் அறிந்த சிறுமியின் தந்தை வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அதையடுத்து, போலீஸார் அவரைத் தேடிப் பிடித்துக் கைதுசெய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.