இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்?

Taiwan Death
By Swetha May 13, 2024 01:29 PM GMT
Report

 இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தை சடலம்

தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் சடலத்தை பல ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் தந்தை ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்துள்ளார்.

இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்? | Daughter Who Hid Her Dead Fathers Body For Years

இந்த நிலையில், பெண் தனது தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. முன்னதாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு அப்பெண்ணின் வீட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர் ஊழியர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளார்.

ஆனால், அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், அந்த பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது தந்தை குறித்து கேட்டனர்.

நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்குமாம்?

நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்குமாம்?

வாழ்ந்த மகள்

அப்போது அவர் பல தடுமாற்றத்துடன் பதில் கூறினார். முதலில், அந்தப் பெண் தனது தந்தை முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும், பிறகு தனது தந்தையை சீனாவிற்கு தனது சகோதரர் அழைத்துச் சென்றதாகவும் சொன்னார்.

இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்? | Daughter Who Hid Her Dead Fathers Body For Years

பின்னர் தனது தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாகவும், அங்கிருந்து இவரின் உடலை எடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அந்த கிடுக்குபிடி விசாரணையில் அந்த பெண் தனது தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும்,

தனது தந்தையின் உடலை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பெண்ணின் தந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தைவானிய சட்டத்தின்படி, சடலத்தை சேதப்படுத்துதல், சிதைத்தல், அவமானப்படுத்துதல் அல்லது திருடுதல் போன்ற

இப்படியும் ஒருவரா...தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த மகள் ! என்ன காரணம்? | Daughter Who Hid Her Dead Fathers Body For Years

குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பெரிய அபராதம் விதிக்கப்படும். நேரடி உறவினர் அல்லது நெருங்கிய நபர் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், தண்டனையை 1.5 மடங்கு வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.