நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் இவை அனைத்தும் நம் வாழ்வில் நடக்குமாம்?
நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், எமக்கு பிடித்தவர்கள், பிரபலங்கள் போன்றோர் இறந்தால், சில நேரங்களில் எமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும்.
அப்படி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும்.
உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். தூக்கத்தில் வருவதுதான் கனவு என பலரும் நினைக்கிறோம். ஆனால் அதையெல்லாம் தாண்டி நம் அழ்மனது நம்மைத் தொடர்புகொள்ள முயற்சிப்பதே கனவு ஆகும். அதில் சில புரிதல்கள் உள்ளது.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் -
- இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
- நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று பொருள்.
- இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வருமாம். சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறப்பார்கள்.
- இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்திலிருந்து தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.
- இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் செல்வ செழிப்பும் ஏற்படுமாம்.
- இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று அர்த்தம்.
-
நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடுமாம்.
- இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டாகுமாம்.
- இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மை கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
- இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லது கிடையாது. கோவிலில் அர்ச்சனை செய்வது சிறந்தது.
- இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்படுமாம்.
- இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டும் எச்சரிக்கையாம்.
- தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகள் ஏற்பட உள்ளது என்று அர்த்தமாம்.
- உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கப் போகிறது என்று அர்த்தமாம்.
- நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி வருமாம்.
- குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற அர்த்தமாம்.
- இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.
- இறந்த மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு வந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருக்குமாம். அப்படி இல்லாமல், அவளின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாக மாறிவிடுமாம்.