விளையாட சென்ற குழந்தைகள் சடலமாக மீட்பு! தம்பியை காப்பாற்ற சென்ற போது நடந்த விபரீதம்
செந்துறை அருகே தடுப்பணையில் விளையாடச் சென்ற குழந்தைகள் மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அரியலூரின் மனப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் சுதாகர்- மைக்கேல். இவர்களது குழந்தைகளான சுடர்விழி(வயது 7), சுருதி (வயது 9) மற்றும் ரோஹித் (வயது 6).
மூவரும் புதிதாக கட்டப்பட்டிருந்த தடுப்பணையில் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது எதிர்பாராதவிதமாக ரோஹித் தவறி விழுந்தான். உடனடியாக ரோஹித்தை மீட்க சுடர்விழி மற்றும் சுருதி போராடிய போது, அடுத்தடுத்து நீரிழ் மூழ்கி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விளையாட சென்ற குழந்தைகள் காணாமல் போனதால், பெற்றோர்கள் தேடிய போதே குழந்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ரூபாய் 15 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் இந்த தடுப்பணை கட்டப்பட்டதும், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தாக்குப் பிடிக்காமல் உடைந்து சரிந்து இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் தரமற்ற வகைகள் அணையை கட்டிய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.