மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகள் - கொலையின் போது நடந்த பயங்கரம்!

Crime Karur Murder
By Vidhya Senthil Sep 21, 2024 05:18 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கரூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மாமியார் மீது கல்லைப் போட்டுக் மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர்

கரூர் மாவட்டம்,தென்னிலை மொஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி.இவருக்கு வயது 72. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் லோகநாதனுடன் வசித்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ,ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகள் - கொலையின் போது நடந்த பயங்கரம்! | Daughter In Law Murder Mother In Law Karur

லோகநாதன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில் அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக விஜயலட்சுமி கணவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இருப்பினும், மாதத்துக்கு ஒருமுறை கணவர் வீட்டிற்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கி மகன், மகளை விஜயலட்சுமி பராமரித்து வந்துள்ளார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி கணவரின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், மாமியார் பாப்பாத்தியுடன் விஜயலட்சுமி விவசாயத் தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்ட இளைஞர் - அதிர்ந்த போலீஸ்

பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்ட இளைஞர் - அதிர்ந்த போலீஸ்

பின்னர், மாலைநெடும் நேரம் ஆகியும் பாப்பாத்தி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் விஜயலட்சுமியிடம் கேட்ட பொழுது, பின்னர் வருவதாகப் பாப்பாத்தி கூறியதால் ஆடுகளை மட்டும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியதாகக் கூறியுள்ளார்.

கொலை 

ஆனால், இரவு முழுவதும் பாப்பாத்தி வீடு திரும்பாத நிலையில், லோகநாதன் தனது தாயைக் காணவில்லை எனத் தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து முகம், தலை சிதைக்கப்பட்ட நிலையில் பாப்பாத்தியின் உடல் விவசாயத் தோட்டத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகள் - கொலையின் போது நடந்த பயங்கரம்! | Daughter In Law Murder Mother In Law Karur

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் உடலைப் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாமியார் பாப்பாத்தி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது, மருமகள் விஜயலட்சுமியைத் தனது மகன் லோகநாதனுடன் இணைந்து குடும்பம் நடத்த வேண்டும்.

குழந்தைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி, ஆத்திரத்தில் பாப்பாத்தி மீது கல்லைத் தூக்கி கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.