வளர்ப்பு பூனையால் துடிதுடித்து பலியான பெண் - வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பொள்ளாச்சி அருகே ஆசையாக வளர்த்த பூனையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு பூனை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்தவர் ரவி -சாந்தி தம்பதியினர் .கடந்த ஓராண்டுக்கு முன்பு ரவி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் சாந்தி தனது மகன் சந்தோஷ் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது வீட்டில் ஒரு பூனைக் குட்டியை ஆசையாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவரது வீட்டுக்கு வெளியில் கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.
இதனைக்கண்ட பூனைக் திடீரென அந்த பாம்பைப் பிடித்து வீட்டிற்குள் போட்டுள்ளது. அப்போது வீட்டின் வெளியில் உறங்கிக்கொண்டிருந்த சாந்தியைப் பாம்பு கடித்துள்ளது.
பலியான பெண்
வலிதாங்க முடியாத சாந்தி கதறி அழுதுள்ளார். அப்போது அலறி சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.