மாயமான 6 வயது சிறுமி - ஒன்றரை அடி இடத்தில்.. பள்ளியில் நடந்த கோர சம்பவம்!
குஜராத்தில் பள்ளி சென்ற ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆறு வயது சிறுமி
குஜராத் மாநிலத்தில் உள்ள பிபாலியா கிராமத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் வியாழக்கிழமையில் பள்ளி சென்றுள்ளார். ஆனால், பள்ளி நேரம் முடிந்தும், சிறுமி வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியின் பள்ளிக்குச் சென்று பார்த்த போது பள்ளி பூட்டப்பட்டிருந்தது . இதனையடுத்து உடனிருந்தவர்கள் சிலர் பள்ளியின் உள்ளே ஏறிக் குதித்து, சிறுமியைத் தேடியுள்ளனர்.
இதனைத் அப்போது பள்ளிக்குப் பின்புறத்தில் சுற்றுச் சுவருக்கு அருகில், ஒன்றரை அடி நீளமே உள்ள இடத்தில் சிறுமி மயக்க நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர். இதனைக்கண்டு கதறிய பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
உயிரிழந்த சம்பவம்
அப்போது சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . அதனடிப்படையில் வழக்கு செய்த காவல்துறையினர் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மரணத்தைத் தற்செயலான மரணம் அல்லது வேறு ஏதாவது காரணிக்காகக் கொலைசெய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.