8 வயதில் மறைத்து வைத்த சாக்லெட்.. 88 ஆண்டு கழித்து எடுத்த மகள் - சுவாரஸ்ய பின்னணி!

England
By Vinothini Oct 30, 2023 11:35 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 சிறுவயதில் மறைத்து வைத்த சாக்லெட்டை 88 ஆண்டு கழித்து கண்டுபிடித்துள்ளனர்.

சாக்லெட்

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் வேறா பெட்செல், இவர் தனது 8 வயதில் அவரின் தந்தை பரிசாக ஒரு சாக்லேட் அளித்துள்ளார். அந்த சாக்லேட், ராஜா ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரியின் வெள்ளி விழாவின் போது அளிக்கப்பட்டது. இந்த பரிசு அவருக்கு மிகவும் ஸ்பெஷல் என்பதால் அதனை சாப்பிடாமல் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்துள்ளார்.

daughter found mothers chocolate after 88 years

பிறகு தனது தந்தையின் அறிவுரைப்படி சாக்லேட்டை ஒரு பாதுகாப்பான பெட்டியில் போட்டு பல ஆண்டுகளுக்கு பாதுகாத்து வந்துள்ளார். அவருக்கு 90 வயது ஆகும் வரை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த சாக்லேட் அந்த பெட்டியிலேயே இருந்துள்ளது.

எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பெட்டியை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிட்டார், கண்டுபிடிக்கமுடியவில்லை. இவர் தனது 95 வயதில் இறந்தார்.

காதலியின் குடும்பத்திற்கே ஸ்கெட்ச்.. தாயை தூக்கிய சைக்கோ காதலன் - அதிர்ச்சி!

காதலியின் குடும்பத்திற்கே ஸ்கெட்ச்.. தாயை தூக்கிய சைக்கோ காதலன் - அதிர்ச்சி!

கண்டுபிடிப்பு

இந்நிலையில், பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரும் அவரது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் அந்த பெட்டியை கண்டெடுத்துள்ளனர். வேறாவின் நான்கு குழந்தைகளின் ஒருவரான நாடின் மெக்காஃபர்டி என்பவருக்கு தற்போது 71 வயதாகிறது. அவர்தான் அந்த சாக்லேட்டை பற்றிய ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளார்.

daughter found mothers chocolate after 88 years

சிறு வயதில் தாய்க்கு இந்த சாக்லேட்டை பற்றிய ஞாபகம் வந்ததும் பிள்ளைகள் அனைவரையும் வீடு முழுவதும் தேட சொன்னாராம். ஆனால் எவ்வளவு தேடியும் சாக்லேட் கிடைக்கவில்லை என்பதால் வேறா சற்று வருத்தம் அடைந்ததாகவே அவரின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 88 ஆண்டுகள் கழித்து தற்போது கிடைத்துள்ள இந்த சாக்லேட்டை பார்ப்பதற்கு தனது தாய் உயிரோடு இல்லை என்பதை நினைத்து அவர் வருத்தமடைந்துள்ளார்.

அவரின் குடும்பத்தார் தற்போது அந்த சாக்லேட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.