வாடகை தராமல் மாளிகையில் தங்கியிருக்கும் பெண் - வெளியேற ரூ.83 லட்சம் தரணுமாம் - ஏன் தெரியுமா?
விருந்தினர் மாளிகை
அமெரிக்காவின் சாண்டா மோனிகாவை சேர்ந்தவர் பல் அறுவை சிகிச்சைப் பயிற்சி பெற்ற டாக்டர். சாஸ்கா ஜோவனோவிக். இவர் கடந்த ஆண்டு ப்ரென்ட்வுட் மலைப்பகுதியில் உள்ள 'Airbnb' என்ற தனது விருந்தினர் மாளிகையை எலிசபெத் ஹிர்ஷ்ஹார்ன் என்ற பெண்ணுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் அன்று முதல் எலிசபெத் வாடகை செலுத்தவில்லை. இதனால் எலிசபெத்தை வெளியேற்றி தனது விருந்தினர் மாளிகையை மற்றவர்களுக்கு வாடகைக்கு விட சாஸ்கா ஜோவனோவிக் படாத பாடு படுகிறார்.
ஆனால் தான் அங்கு தங்குவதற்கு உரிமை இருப்பதாக எலிசபெத் கூறுகிறார். இதற்கிடையே வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், அவரை வெளியேற்றுவதற்கு சட்டப்பூர்வ காரணம் எதுவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
வெளியேற மறுக்கும் பெண்
தனது விருந்தினர் மாளிகையை ஆக்கிரமிப்புச் சான்றிதழோ அல்லது ஷவர் கட்டுவதற்கான அனுமதியோ இல்லாமல் சாஸ்கா ஜோவனோவிக் வாடகைக்கு விடத் தொடங்கியதால், இது கலிபோர்னியா சட்டத்தின்படி சட்டப்பூர்வ வாடகை அல்ல என்று கூறப்படுகிறது.

மேலும், மாளிகையை காலி செய்ய உரிமையாளர் 1,00,000 டாலர் (சுமார் ரூ.83 லட்சம்) தர வேண்டுமென எலிசபெத்தின் வழக்கறிஞர் கிளைம் செய்துள்ளார். எலிசபெத் ஹிர்ஷ்ஹார்ன் செப்டம்பர் 2021ல் விருந்தினர் மாளிகையை ஒரு இரவுக்கு 105 டாலர் என 6 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 540 நாட்கள் வாடகை செலுத்தாமல், அங்கிருந்து வெளியேறவும் மறுத்து வருகிறார்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan